இன்ஸ்பெக்டர் மகனை தாக்கி வழிப்பறி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
இன்ஸ்பெக்டர் மகனை தாக்கி வழிப்பறி
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 
Latest district News



பல்லடம் : பல்லடம் அருகே, போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை, மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜன்; நீலகிரி மாவட்டம், மசினகுடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகன் பூபாலகிருஷ்ணன், 28; திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்தில் சைட் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். நேற்றிரவு, ரத்தக்காயத்துடன் பூபாலகிருஷ்ணன், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் வந்தார்.

அவர் போலீசாரிடம் கூறியதாவது:
அவினாசிபாளையத்தில் இருந்து கோவைக்கு டூவீலரில் சென்ற போது, வழிமறித்த மூவர், மாதப்பூர் அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அடித்து உதைத்து, ஆபாச மொபைல் செயலி ஒன்றை நிறுவுமாறு கூறி, எனது புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்தனர். செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்ததுடன், ஏ.டி.எம்., கார்டு வாயிலாக, 13 ஆயிரம் ரூபாய் எடுத்தனர். எனது மேனேஜரிடம் பேசி, 5 ஆயிரம் ரூபாய் அனுப்புமாறு கூறினர். இறுதியில், என்னை அடித்து விரட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X