கயிறு தொழில் குழுமங்கள் துவக்கி வைக்கிறார் முதல்வர் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கயிறு தொழில் குழுமங்கள் துவக்கி வைக்கிறார் முதல்வர்
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 



திருப்பூர் : திருப்பூரில், வரும் 25ம் தேதி நடக்கவுள்ள விழாவில், கயிறு தொழில் குழுமங்களையும், 'சிட்கோ' சார்ந்த தொழில் திட்டங்களையும், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.



திருப்பூர், பாப்பீஸ் ஓட்டலில் வரும் 25ம் தேதி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், விழா நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்; தமிழ்நாடு கயிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், குண்டடம் மற்றும் கரூரில் அமைய உள்ள கயிறு தொழில் குழுமங்களுக்கான அரசாணை, தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், தொழில்முனைவோருக்கு உதவி, கயிறு தொழில் சார்ந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்; 'சிட்கோ' சார்ந்த தொழில் திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு, திருப்பூரில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு நடத்தினார். அனைத்து அரசுத்துறையினர் இணைந்து, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலைத்துறையினர், சாலை சீரமைப்பு பணிகளை துவக்கியுள்ளனர்.முன்னதாக, 24ம் தேதி, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் முதல்வர், அன்றிரவு திருப்பூரில் தங்குகிறார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X