மாணவன் அடித்துக் கொலை நண்பர்களிடம் விசாரணை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மாணவன் அடித்துக் கொலை நண்பர்களிடம் விசாரணை
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 



கோவை : கோவையில், போதைக்கு அடிமையான பள்ளிச்சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.



கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான். போதை பழக்கத்துக்கு அடிமையான இந்த சிறுவன், சரிவர பள்ளிக்கு செல்லாமல் சுற்றி வந்தான்.நேற்று முன்தினம் கஞ்சா போதையில், பள்ளிக்கு அருகேயுள்ள நுாலகம் முன்பாக விழுந்து கிடந்தான். அவனை எழுப்பி, வீட்டுக்கு செல்லுமாறு நண்பர்கள் வற்புறுத்தினர்.

அப்போது நண்பர்களுக்கும், பள்ளி சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போதையில் இருந்த சிறுவனை கட்டுப்படுத்த முடியாமல், அங்கிருந்தவர்கள் திணறினர். ஒரு சிலர் அடிக்கவும் செய்தனர்.இந்நிலையில், சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக, சிறுவன் தாயார் அளித்த புகார்படி, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'சிசிடிவி' காட்சிப்பதிவுகள், மொபைல் போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் அடிப்படையில், சிறுவனை தாக்கிய நண்பர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X