‛டூ-வீலர் மோதி பஸ் தீக்கிரை இரு சிறுவர்கள் சிக்கினர் | சென்னை செய்திகள் | Dinamalar
‛டூ-வீலர் மோதி பஸ் தீக்கிரை இரு சிறுவர்கள் சிக்கினர்
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 



சென்னை : இருசக்கர வாகனம் மோதி, தனியார் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தில், இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.



மேற்கு தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலையில், கடந்த 15ம் தேதி காலை, 5:00 மணியளவில், தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த, தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைத்தனர். இது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரித்தனர்.

அதில், காரப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 35, வடபழநியைச் சேர்ந்த சிவா, 41, ஆகியோரிடம், இரண்டு சிறுவர்கள், இருசக்கர வாகனத்தில் வந்து மொபைல் போன் பறித்துள்ளனர்.இந்த சிறுவர்கள் தாம்பரம் வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பெட்ரோல் டேங்க் வெடித்து, பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது.
அங்கிருந்த 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர்களின் அடையாளம் தெரிந்தது.இவர்களை, பெரும்பாக்கத்தில் நேற்று பிடித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, ஒரு மாதத்திற்கு முன், வளசரவாக்கத்தில் ஆட்டோ திருடியதையும், 15ம் தேதி மொபைல் போன்கள் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்பு கொண்டனர்.இவர்கள் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X