வகுப்புக்கு செல்லாமலே தேர்வில் பாஸ்: மாணவர் நலனில் விளையாட்டு!
Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: பி.எட்., கல்லுாரிகள் சில, 'பயோமெட்ரிக்' நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு வகுப்புகளுக்கே வராதவர்களையும், தேர்வு எழுத அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 720க்கும் மேற்பட்ட பி.எட்., எம்.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. பி.எட்., கல்லுாரிகளில் நடக்கும் குளறுபடிகளையும், முறைகேடுகளையும் தடுக்க, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் கல்லுாரிக்கு வராமலேயே, வருகை பதிவு வழங்கப்படுவதை தடுக்கும் இத்திட்டத்தை, துவக்கத்தில் அனைத்து கல்லுாரிகளும் செயல்படுத்தின. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்தாது, கல்லுாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.



latest tamil news



கல்வியாளர் பிரபாகரன் கூறியதாவது:
பி.எட்., கல்லுாரிகளுக்கு, 200 வேலை நாட்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில், 80 சதவீத வருகைப்பதிவு கொண்டவர்களே, தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.முதலாமாண்டில் நான்கு வாரம், இரண்டாம் ஆண்டில், 16 வார காலமும் பிற பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு, கல்லுாரிக்கே வராத மாணவர்களையும், தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, 'பயோமெட்ரிக்' பதிவு முறைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது, இந்நடைமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் உரிய தகுதிகளின்றி வகுப்புகள் எடுப்பதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறைகளில், கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசிரியர்கள் உரிய தகுதிகளின்றி வகுப்புகள் எடுப்பதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறைகளில், கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
18-ஆக-202211:29:37 IST Report Abuse
Manguni இதுகளிலெலாம் வாத்தியார் ஆகி மாணவர்களை கண்டிக்க என்ன உரிமை இருக்கு?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-ஆக-202211:22:17 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியல் ஆட்சியில் கோமாளி துக்ளக் அரசனின் மங்குனி அமைச்சர்கள் உள்ள வரை இப்படித்தான் நடக்கும்....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஆக-202208:32:23 IST Report Abuse
Bhaskaran எல்லாம் பணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X