வகுப்புக்கு செல்லாமலே தேர்வில் பாஸ்: மாணவர் நலனில் விளையாட்டு! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வகுப்புக்கு செல்லாமலே தேர்வில் பாஸ்: மாணவர் நலனில் விளையாட்டு!
Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 

கோவை: பி.எட்., கல்லுாரிகள் சில, 'பயோமெட்ரிக்' நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு வகுப்புகளுக்கே வராதவர்களையும், தேர்வு எழுத அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 720க்கும் மேற்பட்ட பி.எட்., எம்.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. பி.எட்., கல்லுாரிகளில் நடக்கும் குளறுபடிகளையும், முறைகேடுகளையும் தடுக்க, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் கல்லுாரிக்கு வராமலேயே, வருகை பதிவு வழங்கப்படுவதை தடுக்கும் இத்திட்டத்தை, துவக்கத்தில் அனைத்து கல்லுாரிகளும் செயல்படுத்தின. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்தாது, கல்லுாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.latest tamil newsகல்வியாளர் பிரபாகரன் கூறியதாவது:
பி.எட்., கல்லுாரிகளுக்கு, 200 வேலை நாட்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில், 80 சதவீத வருகைப்பதிவு கொண்டவர்களே, தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.முதலாமாண்டில் நான்கு வாரம், இரண்டாம் ஆண்டில், 16 வார காலமும் பிற பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு, கல்லுாரிக்கே வராத மாணவர்களையும், தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, 'பயோமெட்ரிக்' பதிவு முறைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது, இந்நடைமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் உரிய தகுதிகளின்றி வகுப்புகள் எடுப்பதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறைகளில், கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசிரியர்கள் உரிய தகுதிகளின்றி வகுப்புகள் எடுப்பதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறைகளில், கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X