'மீட்டர் கேஜ்' கால ரயில்களை இயக்க எதிர்பார்ப்பு:தொடர் புறக்கணிப்பால் பயணியர் அதிருப்தி
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பொள்ளாச்சி:திண்டுக்கல், கோவையில் இருந்து, பொள்ளாச்சி வழித்தடத்தில் தென் மாவட்டங்களுக்கான பழைய ரயில்களை மீண்டும் இயக்க மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடமானது, குறைந்த துாரத்தில் தென் மாவட்டங்களை, கோவையுடன் இணைக்கும் வகையில் உள்ளது. 'மீட்டர் கேஜ்' ஆக இருந்த இப்பாதை சுமார், 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ரயில் பாதையாக கடந்த, 2017-ல் மாற்றப்பட்டது.


மேலும், 250 கோடி ரூபாய் செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. 'மீட்டர் கேஜ்' காலத்தில், கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில், துாத்துக்குடிக்கு பகல்நேர ரயில், மதுரைக்கு பகல் நேர இன்டர்சிட்டி ரயில், செங்கோட்டைக்கு இரவு நேர பயணிகள் ரயில், திண்டுக்கல் - கோவை பயணியர் ரயில் இயக்கப்பட்டு வந்தது.தென் மாவட்டங்களின் இணைப்பு பாலமாக இருந்த இந்த ரயில்கள், பயணியருக்கு வாழ்வாதாரமாகவும், வரப்பிரசாதமாகவும் இருந்தது. தற்போது, பஸ் கட்டணம் உயர்வு, சாலை மார்க்கமாக பயண நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.ஆனால், கோவையில் இருந்து போத்தனுார் - பொள்ளாச்சி வழியாக, தென் மாவட்டங்களுக்கு, 'மீட்டர் கேஜ்' கால அட்டவணையில் இடம்பெற்றிருந்த ரயில்களை இயக்க வேண்டும் என்ற, நீண்டகால கோரிக்கையை, ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ரயில்வே ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சேலம் கோட்டம் ரயில் பயணியர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறியதாவது: தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீதம் பங்களிக்கிறது.
கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை இயக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின், 6 எம்.பி.,கள், 7 எம்.எல்.ஏ.,க்கள், 200-க்கும் மேற்பட்ட பொதுநல சங்கங்கள், 20 கிராம பஞ்சாயத்து தீர்மானங்கள், 2,000 'ஆன்லைன்' மனுக்கள் வாயிலாக, ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர், தென்னக ரயில்வே பொது மேலாளர், ரயில்வே கோட்ட மேலாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



ரயில்களில் நெரிசல் அதிகரிப்பு!

தற்போது, பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை (அமிர்தா), கோவை - மதுரை, பொள்ளாச்சி - கோவை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (வாராந்திர சிறப்பு ரயில்) ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில், திருச்செந்துார், சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு இயக்கப்படும் தொலைதுார ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
'மீட்டர் கேஜ்' காலத்தில் இயக்கிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வராத நிலையில், தற்போது இயங்கும் தொலைதுார ரயில்களில், நெரிசலை தவிர்க்க, கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.ஆனால், பயணியர் சிரமத்தை உணராத ரயில்வே நிர்வாகத்தால், தொலைதுார ரயில்களில், பயணியர் நின்று கொண்டும், படிக்கட்டு, கழிவறை பகுதிகள், நடைபாதையிலும் அமர்ந்து பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு ரயில்வே நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X