பஞ்சாயத்து தலைவி 'செக் பவர்' பறிப்பு | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
பஞ்சாயத்து தலைவி 'செக் பவர்' பறிப்பு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

ஆரணி:ஆரணி அருகே, பஞ்சாயத்து கணக்குகளை சரியாக பராமரிக்காத இரும்பேடு பஞ்., தலைவியின், 'செக் பவர்' பறிக்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு பஞ்., தலைவி தரணி, 50; இவரது கணவர் வெங்கட்ராமன்; தி.மு.க., பிரமுகர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு, முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும், பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும், பஞ்., தலைவி பற்றி, மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு புகார் சென்றது.
ஆரணி பி.டி.ஓ., சீனுவாசன் விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக, பஞ்., கணக்குகள் முறையாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்தது.இது குறித்த அறிக்கை, கலெக்டரிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பஞ்., தலைவி தரணியின், 'செக் பவரை' ரத்து செய்து, மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X