'போக்சோ'வில் கைதான ஹெச்.எம்., தற்கொலை | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
'போக்சோ'வில் கைதான ஹெச்.எம்., தற்கொலை
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

கலசப்பாக்கம்:'போக்சோ' வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்த தலைமை ஆசிரியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியர் காளியப்பன், 55; இவர், மேல்தாங்கல் கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரியில், பள்ளி மாணவியிடம் பாலியல் துாண்டுதலில் ஈடுபட்டதாக போளூர் மகளிர் போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்தார். அப்போது முதல், 'நான் செய்யாத தவறுக்காக சிறை சென்று, நீதிமன்றத்துக்கு அலைகிறேன்' என குடும்பத்தாரிடம் கூறி, சரிவர சாப்பிடாமலும், துாங்காமலும் மனவேதனையில் இருந்துள்ளார்.

வெளியில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாக கூறி வந்தவர், நேற்று அதிகாலை வீட்டின் மேல்மாடியிலுள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு மூன்று மகள்கள்உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X