புதுச்சேரி-பஸ்களில் தடையை மீறி பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரனை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி நகரப் பகுதியில் செல்லும் பஸ்களில் ஏர் ஹாரனை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது.கடந்த 14ம் தேதி போக்குவரத்து எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், சுதந்திர தினம் முதல் பஸ்களில் ஏர் ஹாரனை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்து இருந்தார்.இதையடுத்து, போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., மாறன் தலைமையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசபெருமாள், ஷன்முக சத்தியா மற்றும் போக்குவரத்து போலீசார், அஜந்தா சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக சென்ற பத்து பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.மேலும் 18 வயதுக்குட் பட்ட பள்ளி மாணவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் பயணித்த மோட்டர் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.