கிருஷ்ணசாமி கல்லுாரி நுாலக வார விழா | கடலூர் செய்திகள் | Dinamalar
கிருஷ்ணசாமி கல்லுாரி நுாலக வார விழா
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



கடலுார்-கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில், நுாலக அறிவியலின் தந்தை அரங்கநாதன் 130வது பிறந்த நாளையொட்டி, நுாலக வார விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் நிர்மலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி முதல்வர் இளங்கோ, நுாலகத்தை பயன்படுத்தும் வழி முறைகள், நுாலக அறிவியியலின் அவசியம் குறித்து பேசினார்.நுாலக வார விழா மற்றும் 75வது சுதந்திர தினத்தையொட்டி கல்லுாரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, தேசியக் கொடியுடன் புகைப்படம் சமர்ப்பித்தல், சொல் விளையாட் டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.நிறைவு விழாவில் சேலம் பெரியார் பல்கலைக் கழக நுாலக மற்றும் தகவல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் கோமதி, இணைய வழியாக சிறப்பு விருந்தினராக பங்கேற்று நுாலகம், நுாலக கல்வியியல் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி செயலாளர் விஜயக்குமார், நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், முதன்மை நுாலகர் அருள்மொழி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X