15 ஆண்டுக்குப்பின் மீண்டும் சிக்னல் இயக்கிட...நடவடிக்கை
Added : ஆக 19, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கள்ளக்குறிச்சியில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிமாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் பல உள்ளன. மேலும், நான்கு முனை சந்திப்பு பஸ் நிலையத்தையொட்டி அமைந்துள்ளதால் எப்போதும் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரும்பான்மையான கனரக வாகனங்கள் சென்றபோதிலும், நகரில் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அத்துடன் கரும்பு லோடு ஏற்றிச்செல்லும் வாகனங்களினாலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கிறது.போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.நான்கு முனை சந்திப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சிக்னல் அமைக்கப்பட்டது. பஸ் நிலையம் அருகிலேயே சிக்னல் இருந்ததால் அதனை இயக்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு நடைமுறைக்கு வராமல் நீடித்து வந்தது. இதனால், கள்ளக்குறிச்சியில் சிக்னல் இயக்கமின்றி போக்குவரத்து போலீசார் மூலம் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொண்டு வருகின்றது.இதனால் நகரில் அமைக்கப்பட்ட சிக்னல் வெறும் காட்சிப் பொருளாக இருந்து வந்தது. சிக்னல் இயக்குவதில் நடைமுறை சிக்கல்களை தீர்த்து மீண்டும் சிக்னல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நான்கு முனை சந்திப்பு, தியாகதுருகம் சாலை, காந்திரோடு, கச்சேரி சாலை ஆகிய பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அமைத்து சிக்னல் சிஸ்டம் மீண்டும் புதிதாக அமைத்து போக்குவரத்து போலீசார் சிக்னலை இயக்கிட வெள்ளோட்டம் பார்த்தனர்.ஆனால் பஸ் நிலையத்திற்கு மிக அருகில் பல்வேறு குறுக்கு சாலைகளுடன் கூடிய மெயின் ரோடில் சிக்னல் முறையை பாதிப்பின்றி இயக்குவதில் மீண்டும் சிக்கல் தொடர்ந்தது.

இதனால் இரண்டாம் முறையாக போலீசார் கையாண்ட நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் நான்கு முனை சந்திப்பினை ஒட்டியபடி அமைக்கப்பட்டிருந்த பழைய சிக்னல் விளக்குகளை அகற்றி, நான்கு முனை சந்திப்பிலிருந்து 100 அடிக்கு முன்பாகவே, புதிதாக சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த சிஸ்டத்தை படிப்படியாக சோதனை செய்து, எவ்வித குழப்பமுமின்றி, பாதுகாப்பாக இயக்கிட முன்னோட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், கண்டிப்பாக கள்ளக்குறிச்சியில் சிக்னல் சிஸ்டம் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி நகரில் காட்சி பொருளாக இயக்கமின்றி இருந்த சிக்னல் சிஸ்டம், மீண்டும் இயங்க உள்ளது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஆக-202220:17:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இனி வரும் காலங்களில் எல்லாம் சரியாகவே இருக்கும்🙏
Rate this:
Cancel
19-ஆக-202210:23:08 IST Report Abuse
Gopalakrishnan S ,,,,,,
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-ஆக-202209:45:04 IST Report Abuse
duruvasar சிக்னல் விளக்குக்கும் விடியல் வரபோகுதா? மகிழ்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X