பள்ளி, கல்லுாரி செய்திகள்///
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கக்கூட்டம் நடந்தது. செயலாளர் ஜெயலட்சுமி வரவேற்றார். முதல்வர் கார்த்திகா ராணி தலைமை வகித்தார். தலைவர் மாரீஸ்குமார், செயலாளர் கரிக்கோல்ராஜ், தாளாளர் ஜெயகுமார், பொருளாளர் நல்லதம்பி, ஏ.கே.ஆர். சவுராஷ்டிரா ஆசிரியர் பயிற்சி கல்லுாரி முதல்வர் பிரசித்தா பங்கேற்றனர்.

முதலாமாண்டுவகுப்புகள் துவக்கம்
மள்ளப்புரம் திருவள்ளுவர் கலை, அறிவியல் மகளிர் கல்லுாரியில் முதலாம்ஆண்டு மாணவிகளுக்கு வகுப்புகள் துவக்க விழா முதல்வர் செல்வக்குமாரி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ராமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னகிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தனர். முதல்வர்கள் கல்வியியல் கல்லுாரி கருப்பசாமி, பாலிடெக்னிக் சுபாராஜன், மெட்ரிக் பள்ளி தனபாக்கியம், துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவியர்கள் பங்கேற்றனர்.

இலவச சைக்கிள் வழங்குதல்
திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி நிகழ்ச்சியில் 417 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை நகராட்சி தலைவர் ரம்யா வழங்கினார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கர்ணன், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், தி.மு.க., இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னச்சாமி, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆண்டு விழா
மதுரை ஹோலி பேமிலி மேல்நிலைப்பள்ளியின் 37வது ஆண்டு விழா தாளாளர் குழந்தை தெரசு தலைமையில்நடந்தது. தலைமையாசிரியை ஜெயராணி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை 58வது வார்டு கவுன்சிலர்ஜெயராம் வழங்கினார். தொழிலதிபர் வைகுந்த் பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியைகள், அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரைக் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., செஞ்சிலுவை சங்கம், ஹோப் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் முதல்வர் சுரேஷ் தலைமையில் நடந்தது.கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன் துவக்கி வைத்தார். செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். தெற்குவாசல் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், சுயநிதிப் பிரிவு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சூரியநாராயணன், என்.சி.சி., தலைமை அலுவலர் கார்த்திகேயன் பேசினர். ஜெய்ஹிந்த்புரம் மெயின் வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கல்லுாரி வந்தடைந்தது. மாணவர்கள், பேராசிரியர்கள் ராமச்சந்திரன், கண்ணன், ராஜா ராஜராஜன், ராமகிருஷ்ணன், மீனாட்சி, காந்திமதி, ஸ்ரீதேவி, சுகுணா, தாரணி, நடராஜன் பங்கேற்றனர்.

மாணவர்களின்தொன்மை பயணம்
மதுரையில் இந்தியன் இலவச சிலம்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் 'தொன்மை அறிவோம்' பயணம் மேற்கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் நஜூமுதீன், சுலைகாபானு தலைமை வகித்தனர். தென்பரங்குன்றம் குடைவரை கோயில், சமணர் படுகை, பாண்டி மண்டல சுத்த சன்மார்க்க சங்கம் போன்ற இடங்களுக்குசென்றனர். கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை பயிற்றுனர் தேவி தொல்லியல் சான்றுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.

மாணவர்களுக்கு பரிசளிப்பு
மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிக்குழுத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். உறவின் முறை தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன், பள்ளி செயலாளர் குணசேகரன், நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நாகநாதன், நிப்பான் பர்னிச்சர் உரிமையாளர் தனுஷ்கோடி ஆகியோர் பங்கேற்றனர்.

பள்ளி விளையாட்டு விழா
மதுரை சொக்கிக்குளம் ஒய்.டபிள்யூ.சி.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா நடந்தது. அமெரிக்கன்கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்து கொடியேற்றி துவக்கி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தாளாளர் மரகதம்ஜெயசீலி வரவேற்றார்.மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். பிரமிட், கராத்தே சாதனை செய்து காட்டினர். தலைமை ஆசிரியை ஜெயகுமாரி நன்றிகூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X