கூடைப் பந்தாட்ட போட்டியில் அசத்திய  கல்லூரிகள் | மதுரை செய்திகள் | Dinamalar
கூடைப் பந்தாட்ட போட்டியில் அசத்திய  கல்லூரிகள்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News

மதுரை : மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான முதல் சுற்று கூடைப்பந்தாட்ட போட்டிகளில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லுாரி, அமெரிக்கன் கல்லுாரி அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.

பசுமலை மேல்நிலைப் பள்ளியில் தென்னிந்திய திருச்சபை பவள விழாவை முன்னிட்டு சி.எஸ்.ஐ., சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே கூடைப் பந்தாட்டப்போட்டி நேற்று துவங்கியது.சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் துவங்கி வைத்தார். சி.எஸ்.ஐ., சினாட் பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா கலந்து கொண்டார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா அணியினர் பங்கேற்றுள்ளனர்.

முதல் லீக் ஆட்டத்தில் கோவை சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரி அணியை 14-:28 புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஸ்காட் கிறிஸ்டியன் கல்லுாரி அணி வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் அமெரிக்கன் கல்லுாரி அணி 46-:16 கணக்கில் கர்நாடக தியாலஜிக்கல் கல்லுாரி அணியை வீழ்த்தியது. அரையிறுதி, இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X