கால்வாயை ஆக்கிரமித்து பிளாட் கண்டுகொள்ளாத அதிகாரிகள் | மதுரை செய்திகள் | Dinamalar
கால்வாயை ஆக்கிரமித்து பிளாட் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News

மேலுார் : ஒத்தப்பட்டியில் நீர்வரத்து கால்வாயை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒத்தப்பட்டியில் 80 ஏக்கர் பரப்பளவில் உள்ள சின்னப்பிடி கண்மாய்க்கு தனியாமங்கலம் 9வது பிரதான கால்வாய் 6வது மடை மற்றும் பல பகுதிகளில் இருந்து வரக்கூடியதண்ணீரால் கண்மாய் நிரம்பும். அதன் மூலம் 300 ஏக்கர் பயன்பெறும். இக் கண்மாயில் இருந்து மறுகால் பாய்ந்து ஒத்தப்பட்டி, மேலவலசையில் சிறுமான் கண்மாய் நிரம்பும். அதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். இக் கண்மாய்களுக்கு இடையேயுள்ள வரத்து கால்வாய்களை தனிநபர்கள் அழித்துள்ளனர்.

விவசாய சங்க செயலாளர் நாராயணன் கூறியதாவது: சின்னப்பிடி கண்மாயில் இருந்து சிறுமான் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து பிளாட் போட்டுள்ளனர். வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்து கற்கள் ஊன்றி ஓராண்டாகியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் கண்மாய் தண்ணீர் வெளியேற வழியின்றி, ஒருபுறம் நீரில் பயிர்கள் மூழ்கியும், மறுபுறம் வறண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என்றார்.தாசில்தார் இளமுருகன்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறுகையில், ''ஓரிரு நாளில் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X