கிருஷ்ண ஜெயந்தி விழா பாலக்காட்டில் கோலாகலம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கிருஷ்ண ஜெயந்தி விழா பாலக்காட்டில் கோலாகலம்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் நிர்மல்ய தரிசனத்துடன் விழா துவங்கியது. பின், செண்டை மேல வாத்தியங்கள் முழங்க யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், மம்மியூர் கோவில் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, கிருஷ்ணர் கோவில் அடைந்தது. தொடர்ந்து மேல்சாந்தி நம்புவதியின் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.

* பாலக்காடு அடுத்துள்ள குன்னத்துார்மேடு ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், அலங்கரிக்கப்பட்ட யானைகள் மேல் கிருஷ்ணரின் தங்கச் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கஜபூஜை, யானைகளுக்கு உணவளிக்கும் 'யானையூட்டி', தாழ்ச்சீவேலி, கிருஷ்ணர் ஜனன பூஜை ஆகியவை நடந்தன.* சின்மயா தபோவன குருவாயூரப்பன் கோவிலில், அலங்கார பூஜை, பஜனை, கதகளி, ஸ்ரீ கிருஷ்ணா அவதார பாராயணம், அபிஷேகம், அகண்டநாம ஜபம் ஆகியவை நடந்தன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X