விரைவு பஸ்களுக்கான முன்பதிவு மையம் திடீர் மூடல்: ஆம்னி பஸ்களுக்கு சாதகமாக அதிகாரிகள்?
Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்: திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடப்பட்டுள்ளது. பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.latest tamil newsதிருப்பூரில் இருந்து சென்னை, திருப்பதிக்கு எஸ்.இ.டி.சி., (விரைவு போக்குவரத்து கழக) பஸ் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து மார்த்தாண்டம், பொள்ளாச்சியில் இருந்து பெங்களூரு, ஊட்டி - நாகர்கோவில் விரைவு பஸ்கள் திருப்பூர் வந்து பயணிகளை அழைத்துக் கொண்டு பயணிக்கிறது. இந்த பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் பழைய பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்தது.

'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியதால், தற்காலிகமாக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டது. எஸ்.இ.டி.சி., பஸ்களும் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாகவே இயங்கின.இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் எஸ்.இ.டி.சி., பஸ்களுக்கான முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது.

சென்னை, திருப்பதி, நாகர்கோவிலுக்கு எஸ்.இ.டி.சி., பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்; பலரும் டிக்கெட் எங்கு முன்பதிவு செய்வது என தெரியாமல் தடுமாறுகின்றனர்.பயணிகள் நிலைமை தான் இப்படி என்றால், தொலைதுாரம் பயணித்து வரும் நடத்துனர்கள் ஒவ்வொருவரையும் டிக்கெட் பரிசோதனை செய்து, பஸ்சில் ஏற்றி, பயணத்தை துவங்குவதற்குள் ஒரு வழியாகி விடுகின்றனர். போக்குவரத்துதுறை அதிகாரிகள், 'ஆன்லைன் வழியாக பலர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அதனால், மையம் மூடப்பட்டுள்ளது,' என சாக்குபோக்கு சொல்கின்றனர்.


ஆம்னி பஸ்களுக்குசாதகமா?டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டது குறித்து விளக்கம் பெற, எஸ்.இ.டி.சி., கோவை கிளை மேலாளர் ஜபாரை தொடர்பு கொண்ட போது, ' பஸ் ஸ்டாண்ட் அருகில் மையம் செயல்படுகிறது.மொபைல்போன் எண் தருகிறேன். பேசுங்கள். டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்,' என்றார். ஆனால், மீண்டும் பலமுறை அழைத்தும் அவர் மையத்துக்கான மொபைல்போன் எண்ணை வழங்கவில்லை.

புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களை புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த எஸ்.இ.டி.சி., முன்பதிவு மையம் மூடப்பட்டது, தனியார் பஸ் கலெக் ஷன் அதிகரிக்க ஆதரவாக போக்குவரத்து கழகம் செயல்படுகிறது என்பதை காட்டுவது போல் உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
19-ஆக-202221:01:59 IST Report Abuse
தமிழ்வேள் போக்குவரத்து துறை மற்றும் போ க அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் , ஆம்னி பஸ் இயக்குபவர்கள் அல்லது அவர்களோடு தொடர்புடையவர்கள் மட்டுமே .. ஆம்னி பஸ்களும் பெரும்பான்மை அமைச்சர் எம் எல் ஏ , எம் பிக்களுக்கு சொந்தமானவை அல்லது பினாமிகள் ..எனவே அதிகாரி என்பவன் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு , ஆம்னி பஸ்ஸுக்கு சேவை செய்கிறான் ...திருத்த முடியாத ஜென்மங்கள் ....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-ஆக-202220:38:06 IST Report Abuse
Ramesh Sargam விரைவு பஸ்களுக்கான முன்பதிவு மையம் திடீர் மூடல்: ஆம்னி பஸ்களுக்கு சாதகமாக அதிகாரிகள்? இதுபோன்ற அக்கிரமங்களையும்/ஊழல்களையும் முதல்வர் 'சர்வாதிகாரி' போல நடந்து கண்டிக்கவேண்டும். செஞ்சிட்டாலும்... அட போய்யா நீ வேற...
Rate this:
Cancel
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
19-ஆக-202217:05:18 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi online booking is best now
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
19-ஆக-202219:37:03 IST Report Abuse
mindum vasanthammaththiya arasin irctc kaal thoosu peraathu...
Rate this:
19-ஆக-202219:43:53 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்படிக்காதவர்கள் ONLINE என்றால் என்னவென்றே தெரியாது / படிக்கவிடாமல் தான் தற்குறிகளா வைத்து வோட்டு பிட்சை எடுத்து கொண்டு இருக்கான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X