மகளிர் குழு வசம் வருது திடக்கழிவு மேலாண்மை! | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மகளிர் குழு வசம் வருது திடக்கழிவு மேலாண்மை!
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



அவிநாசி : ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை, மகளிர் குழுவினர் வசம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர மேற்கொள்ளவும், துாய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பையை சேகரித்து, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து எரிவாயு, மின்சாரம் தயாரிப்பது உட்பட பணிகளை மேற்கொள்ளவும், ஊராட்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.

மாநிலத்தில், முன்மாதிரி ஊராட்சிகளை தேர்வு செய்யும் நோக்கில், கடந்த மாதம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட உயரதிகாரிகள், மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டனர். சுத்தம், சுகாதாரம் சார்ந்த பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து, ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறிந்தனர்.'கட்டமைப்பு வசதிகள் இருந்தும் துாய்மை பணியாளர் பற்றாக்குறையால் தான், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர மேற்கொள்ள முடியவில்லை' என்பது, கள ஆய்வில் தெரியவந்தது.
'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது போன்ற பணிகளை மகளிர் குழுவினரிடம் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது, விரைவில் அரசாணையாக வெளியாகவும் வாய்ப்பு உள்ளது' என்கின்றனர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X