விருதுநகரில் 3415 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 4 பேர் கைது | விருதுநகர் செய்திகள் | Dinamalar
விருதுநகரில் 3415 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 4 பேர் கைது
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News


விருதுநகர் : விருதுநகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் 3415 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 4 பேரை கைது செய்தனர்.


எம்.புதுப்பட்டி கிருஷ்ணம நாயக்கன் பட்டி விலக்கு அருகே நேற்று முன்தினம் நின்ற வேனில் 30 கிலோ எடை கொண்ட 40 பைகளில் ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. போலீசார் பறிமுதல் செய்து கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.நேற்று கட்டையாபுரம் பாலத்தின் கீழ் 40 கிலோ கொண்ட 41 பைகளில் ஆயிரத்து 640 கிலோ, மற்றொரு பையில் 240 கிலோ என 1.88 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த சேவியரை 58, கைது செய்தனர். மேலும் விருது நகர் பஜார் சுற்று பகுதிகளில் டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய திருத்தங்கல் வீரஜோதியிடம் 22, இருந்து 120 கிலோ, அல்லம்பட்டி பால்பாண்டி 34, யிடம் 105 கிலோ, அருப்புக்கோட்டை ரோடு கார்த்திக்ராஜாவிடம் 26, இருந்து 110 கிலோ என மொத்தம் 3,415 கிலோ ரேஷன் அரிசி, 3 டூவீலர்கள், ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X