சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கர் படம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை: தமிழகத்தில் அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் வைக்க சட்டக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



latest tamil news



பெரியகுளம் அருகே தாமரைக்குளம் சசிகுமார் தேனி சட்டக் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர். இவரை சஸ்பெண்ட் செய்து கல்லுாரி முதல்வர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி சசிகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: நாம் சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடுகிறோம். தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்களில் சிலரை தற்போது ஜாதிய அடையாளத்திற்குள் சுருக்கிவிட்டனர்.அம்பேத்கரின் உருவப் படத்தை கல்லுாரி முதல்வரின் அலுவலக அறையில் வைக்க வேண்டும், பாடத்தை தமிழில் கற்பிக்க வேண்டும் என மனுதாரர் விரும்பினார். இதில் மிக உணர்ச்சிவசப்பட்டு, முதல்வருக்கு எதிராக அவதுாறான வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. நன்னடத்தையை மீறியதாக மனுதாரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

எதிர்காலத்தில் வழக்கறிஞராக வரவிருக்கும் மனுதாரரே தனது வழக்கில் ஆஜராகி வாதிட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதல்வர் அலுவலக அறையில் தற்போது அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது எனது முன்னிலையில் கல்லுாரி ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனுதாரர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அவர் ஒரு பொது நோக்கில் விஷயத்தை கையில் எடுத்துள்ளார். மனப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். அவர் 2 வாரங்களாக வகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மேல் துன்பத்தை அனுபவிக்கத் தேவையில்லை. எனவே இவ்விவகாரம் முடிக்கப்பட்டதாக கருதும்படி முதல்வருக்கு உத்தரவிடுகிறேன். இதனால் மனுதாரருக்கு எவ்வித களங்கமும் ஏற்படாது என்பதை தெளிவுபடுத்துகிறேன்.






அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். சமூக விடுதலையின் சின்னம். அவரது புலமை ஈடு இணையற்றது. ஒவ்வொரு சட்ட மாணவருக்கும் அவர் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்க முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் வைக்க சட்டக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.

மனுதாரர் படிப்பை முடித்தபின் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு வழக்கில் அபராதமாக ரூ.10 ஆயிரத்தை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் நல வாரிய அறக்கட்டளைக்கு செலுத்தவும், அத்தொகையை பட்டியல் ஜாதியைச் சேர்ந்த சட்டக்கல்லுாரி மாணவர் நலனிற்கு செலவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டேன்.

அத்தொகையை மனுதாரருக்கு அறக்கட்டளை வழங்க வேண்டும். இது அவர் சட்ட புத்தகங்கள் வாங்க உதவும். தொண்டு வீட்டில் இருந்தே துவங்க வேண்டும். அம்பேத்கரின் படம் எனது அறையின் சுவர்களில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். விடுபட்டுள்ள இதை விரைவில் சரி செய்ய தீர்மானித்துள்ளேன். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
19-ஆக-202221:15:46 IST Report Abuse
Srivilliputtur S Ramesh தமிழ் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் எப்போது ஜனாதிபதி, பிரதமரின் படங்கள் மாட்டப்படும் ? ரேஷன் கடைகளில் "சர்க்காரியா" புகழ் "கட்டுமரத்தின்" படம் மாட்டப்பட்டுள்ளது. என்ன மாநிலம் இது ?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஆக-202217:23:23 IST Report Abuse
Vena Suna அம்பேத்கார் படம் வைக்க வேண்டும்,இந்திரா காந்தி படம் வேண்டும், பெரியார் படம் வேண்டும்,கலைஞர் படம் வேண்டும், எம்ஜிஆர் படம் வேண்டும்..இப்படி முடிவு கிடையாது. எல்லா படத்தையும் தூக்குங்க.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-ஆக-202211:13:22 IST Report Abuse
sankaranarayanan படங்கள் வைக்கக்கூட நீதி மன்ற உத்திரவா? பிறகு படத்தை எப்படி மாட்டவேண்டும் எவ்வளவு உயரத்தில் மாட்டவேண்டும் எதற்கு நடுவில் மாட்டவேண்டும்., என்றுகூட உத்திரவு வருமய்யா - நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X