மாநகராட்சி பழைய பைல்கள் எரிக்க முயற்சி? விசாரணைக்கு உத்தரவு
Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டது; பழைய கோப்புகள் எரிந்தது தொடர்பாக, துறை ரீதியான விசாரணைக்கு, கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருக்கிறார்.



latest tamil news



கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகை, மத்திய மண்டல அலுவலகம் அருகே இருக்கிறது. ஆய்வுக்கு வரும் உயரதிகாரிகள், இங்கு தங்காமல், அரசு விருந்தினர் மாளிகை அல்லது நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனர்.

அதனால், ஆய்வு மாளிகை முதல் தளத்தில் பழைய கோப்புகள், கீழ்தளத்தில் பிளீச்சிங் பவுடர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. பழைய கோப்புகள் மற்றும் பிளீச்சிங் பவுடரில் தீ பரவியது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு அலுவலர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கவனத்துக்கு சென்றதும், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதன் பின், தீ விபத்து நடந்தது தொடர்பாக கோப்பு தயார் செய்யப்பட்டு, பிரதான அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.






அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இச்சூழலில் தீ விபத்து ஏற்பட்டு, பழைய கோப்புகள் எரிந்திருப்பது; அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தீயணைப்பு துறையினரிடம் கேட்டபோது, 'மாநகராட்சி அலுவலகத்தில் பழைய காகிதங்கள் கட்டு கட்டாக இருந்தன. கோப்புகளா என எங்களுக்கு தெரியாது' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
19-ஆக-202212:33:50 IST Report Abuse
rasaa அவ்வளவுதான்
Rate this:
Cancel
19-ஆக-202212:28:53 IST Report Abuse
குறியீடு இதுதான் திராவிட மாடல் . விஞ்ஞான பூர்வமான ஊழல் ஒழிப்பு
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
19-ஆக-202211:25:42 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...மாநகராட்சி பைல்கள் எரிந்து விட்டதால் அதற்கு பேப்பர் வாங்கிய செலவு ஒரு இரண்டு கோடின்னு கணக்கு எழுதி திருட்டு திமுக ஆட்டையை போடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X