திண்டுக்கல் போலீஸ் மீது வழக்கு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
திண்டுக்கல் போலீஸ் மீது வழக்கு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண் போலீசை போதையில் தவறாக பேசியதாக ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கபாண்டியன் 38 ,மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவர் ராமநாதபுரத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்தார். நன்னடத்தை மீறியதாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிமாறுதல் பெற்று 3 நாட்களுக்கு முன் திண்டுக்கல் ஆயுதப்படையில் சேர்ந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு அதிக மதுபோதையில் காரை ஓட்டிச்சென்ற தங்கபாண்டியன் ஆயுதப்படை மைதானம் அருகே மோதினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரவு பணியிலிருந்த பெண் போலீஸ், டாக்டர்களிடம் தவறாக பேசியுள்ளார். வடக்கு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X