ஆக. 27ல் மதுரையில் தேசிய நாட்டின நாய்கள் கண்காட்சி | மதுரை செய்திகள் | Dinamalar
ஆக. 27ல் மதுரையில் தேசிய நாட்டின நாய்கள் கண்காட்சி
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



மதுரை : மதுரை ரிசர்வ்லைன் மைதானத்தில் தேசிய அளவிலான நாட்டின நாய்கள் வளர்ப்பு குறித்த கருத்தரங்கு கண்காட்சி ஆக. 27 காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.


நாட்டின நாய்கள் வளர்ப்போர் கண்காட்சியில் பங்கேற்கலாம்.இதுகுறித்து தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரிச்சர்ட் ஜெகதீசன் கூறியதாவது:

நாட்டின நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கவ்வி, கோம்பை போன்றவை தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்து பயணம் செய்கின்றன. உரிமையாளர்களிடம் அன்பு பாராட்டும் இவை கட்டளைக்கு கீழ்ப்படியும். சிறப்பாக காவல் காக்கும். வேட்டையாடும் திறன் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பராமாரிப்பு போன்ற பண்புகளை கொண்டவை.
இவற்றை வீட்டில் வளர்ப்பதே நல்லது. பண்ணைத் தொழிலாகவும் உற்பத்தி செய்து லாபம் ஈட்டலாம்.இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆக.27 காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை மதுரை ரிசர்வ்லைன் மைதானத்தில் கண்காட்சி கருத்தரங்கு நடத்த உள்ளோம்.
வளர்ப்பு முறை நோய் தீவன பராமரிப்பு குறித்து வல்லுனர்கள் பேச உள்ளனர். கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாய்களுக்கு சான்றிதழ் சிறப்பு கேடயம் வழங்கப்படும் என்றார்.முன்பதிவுக்கு 94862 40357ல் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சி நாளன்று மைதானத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம் என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X