வெளிநாட்டு வேலை ஆசையில் ரூ.5 லட்சத்தை இழந்த வாலிபர் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வெளிநாட்டு வேலை ஆசையில் ரூ.5 லட்சத்தை இழந்த வாலிபர்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே டி. புனவாசல் அருகே வங்காபுரம் முனியாண்டி மகன் கருப்புராஜா 28. தற்போது தென்ஆப்பிரிக்காவில் பணிபுரிகிறார். இவருக்கு 2020ல் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மெயிலில் வேலைவாய்ப்பு விளம்பரம் வந்தது.அந்த முகவரியில் விபரங்களை அனுப்பிய போது டென்மார்க் மருத்துவ மனையில் பார்மஸ்சிஸ்ட் பணிக்கு தேர்வாகியுள்ளதாக அந்த நபர்கள் கூறினர்.இதற்காக விசா, விமான கட்டணம்,தங்கும் அறைகட்டணம் என பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.5 லட்சம் வரைகருப்புராஜா செலுத்தினார். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. தன்னை ஏமாற்றிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து,பணத்தை மீட்டுத்தர வேண்டும், என கருப்புராஜா புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X