காய்கறி சாகுபடி குறைப்பு; விவசாயிகள் முடிவு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
காய்கறி சாகுபடி குறைப்பு; விவசாயிகள் முடிவு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



பொங்கலுார் : திருப்பூர் மாவட்டத்தில், ஆடிப்பட்டத்திலேயே சாகுபடி பணியை துவக்க விவசாயிகள் ஆயத்தமாகினர்.


விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடியில் கவனம் செலுத்தியதால் உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. தேவையை விட உற்பத்தி அதிகரித்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. தக்காளி, கத்தரி, வெண்டை போன்றவற்றின் விலை சரிந்துள்ளது. வெங்காயம் போட்ட முதலுக்கே மோசமாகிவிட்டது.போதுமான நீர் வளம் இருந்தும் தொடர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் கை கொடுக்கும் வெங்காயம் கடந்த ஓராண்டாக விவசாயிகளை வீழ்த்திவிட்டது.

எனவே, காய்கறி பயிர் சாகுபடியை குறைக்க விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.இந்த ஆண்டு தேங்காய் விலை சரிந்துள்ள போதிலும் விவசாயிகள் தென்னை நடவை அதிகரித்துள்ளனர். கணிசமான விவசாயிகள் மரவள்ளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். மேலும், சோளம், மக்காச்சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மரப்பயிர்கள் போன்றவற்றை சாகுபடி செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X