முதுகலை மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
முதுகலை மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லுாரி முதுகலை மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், நரம்பியல் மருத்துவத்தில் முதுகலை இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தவர் பிரவீன் அன்னதாதா, 25. ஆந்திரா மாநிலம் நெல்லுாரை சேர்ந்தவர்.அரசு கலைக்கல்லுாரி சாலையில், தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், நேற்று மதியம், அறையில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.இதையறிந்த அவரது நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

'ஒரு வாரமாக மன உளைச்சலுடன் இருந்த பிரவீன் அன்னதாதா, வகுப்புக்கு வரவில்லை' என்று சக மாணவர்கள் தெரிவித்தனர். அரசு தேர்வு எழுதுவதற்கான தடையின்மை சான்று, மாணவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார், மாணவரின் மொபைல் போன், நோட்டு புத்தகங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X