அந்தியூர் அரசு கல்லூரியில் சேர 172 பேர் விண்ணப்பம்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ஏழை மற்றும் மலைப்பகுதி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட அந்தியூர் அரசு கல்லுாரியில் சேர, 172 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட அறிக்கை:
அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுடன், உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு இடங்களில் அரசு கல்லுாரிகள் துவங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த, 2021-22ல் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் 10 மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டன. நடப்பு, 2022-23ம் ஆண்டுக்கான உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், அந்தியூர் மற்றும் 10 மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்க அறிவிக்கப்பட்டது. புதிய கல்லுாரிகளில் நடப்பாண்டுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதன்படி அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., இளங்கலை (தமிழ்) பிரிவில்-19 மாணவர்கள், 41 மாணவியர், பி.ஏ., இளங்கலை (ஆங்கலம்) பிரிவில், 11 மாணவர்கள், 13 மாணவியர், பி.காம் (வணிகவியல்) இளங்கலை பிரிவில், 30 மாணவர்கள், 27 மாணவியர், பி.எஸ்.சி., (கணினி) இளங்கலை பிரிவில், 11 மாணவர்கள், 16 மாணவியர், பி.எஸ்.சி., (கணிதம்) இளங்கலை பிரிவில் ஒரு மாணவர், மூன்று மாணவியர் என, 172 பேர் மா கல்லுாரியில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.
அந்தியூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதியினர், பவானி, கோபி, ஈரோடு பகுதிக்கு சென்று கல்லுாரி கல்வியை தொடர்ந்தனர். நடப்பாண்டில், இங்கு மாணவர் சேர்க்கை துவங்கியதால், ஏராளமான மாணவர்கள் விண்ணப்பம் செய்ததுடன், விண்ணப்பம் பெற்று சென்றுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X