ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் ஈரோட்டில் 5ம் பிளாட்பார்ம் அமைக்கவும் வலியுறுத்தல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் ஈரோட்டில் 5ம் பிளாட்பார்ம் அமைக்கவும் வலியுறுத்தல்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

'ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றுவதுடன், ஈரோட்டில் ஐந்தாவது பிளாட்பார்ம் அமைக்க வேண்டும்' என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்வைக்கு, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பாஷா கடிதம் அனுப்பினார்.
அவரது கடிதத்தில் கூறியதாவது:
ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டில் இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு அதிகாலை, 3:45 மணிக்கு சென்னை செல்கிறது. பயணிகள், 3:00 மணிக்கே எழுந்து புறப்படும் நிலை உள்ளதால், இரவு, 10:00 மணிக்கு இயக்கினால் பயனுள்ளதாகும்.

இரவு, 9:00 மணிக்கு ஈரோட்டில் புறப்படுவதால், பவானி, அந்தியூர், கோபி, சத்தி, காங்கேயம் பகுதியில் இருந்து வருவோர் வருவோர் சிரமப்படுகின்றனர்.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில், 9:00 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டுக்கு, 10:30 மணிக்கு வந்து அதிகாலை, 5:00 மணிக்கு சென்னை சென்றடைந்தது. தற்போது இந்த ரயில், கோவையில், 10:30 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு, 12:05 மணிக்கு வந்து, சென்னைக்கு காலை, 6:20 மணிக்கு சென்றடைகிறது. அதுபோல, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேரமும் பயணிகள் வசதிக்காக மாற்றப்பட்டது. அதுபோல ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நான்கு பிளாட்பார்ம் மட்டும் உள்ளது. தினமும், 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், உரிய நேரத்தில் பிளாட்பார்ம் கிடைக்காமல் ரயில்கள், ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்து செல்கின்றன. எனவே, ஐந்தாவது பிளாட்பார்ம் அமைத்து தர வேண்டும்.
ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது முதல், ஆம்பூர், வாணியம்பாடி ரயில் நிலையங்களில் நின்று சென்றன. தற்போது நிற்பதில்லை. அதுபோல, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் ரயில், சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்றது. தற்போது நிறுத்துவதில்லை. இந்த ஸ்டேஷன்களில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X