தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் கட்டப்படுமா? | கரூர் செய்திகள் | Dinamalar
தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் கட்டப்படுமா?
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

உயிரிழப்பு உள்ளிட்ட விபத்துக்களை அடிக்கடி ஏற்படுத்தும், கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நங்காஞ்சி ஆற்றிலுள்ள தடாகோவில் பாலம் வழியாகத்தான் அரவக்குறிச்சிக்கு நுழைய வேண்டும். இவ்
வழியாக பழனி, தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக கேரளா மற்றும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கிருஷணகிரி, ஓசூர், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களுக்கு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

அதிக போக்குவரத்து நடக்கும் சாலையிலிருந்து தான் பிரிந்து அரவக்குறிச்சிக்கு செல்ல வேண்டும். அரவக்குறிச்சிக்கு கிழக்கு பகுதி கிராமங்களான தடாகோவில், கணக்குவேலன்பட்டி, ராசாபட்டி, வெஞ்மாங்கூடலுார் உள்ளிட்ட, 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அரவக்குறிச்சிக்கு இரு சக்கரவாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர்.
அப்போது அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிக்குச் செல்ல இரண்டு சக்கர மற்றம் நான்கு சக்கர வாகனங்கள் நெடுஞ்சாலையை குறுக்கே கடக்கும் போது மின்னல் வேகத்தில் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்து நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன.
இந்த நால்வழிச் சாலை அமைத்த பின் விபத்தில் சிக்கி, 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இங்கு, விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
அமைத்தால் அரவக்குறிச்சி பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் அடியில் அமைக்கப்படும் சாலை வழியாக தடையில்லாமல் செல்லும். இதனால் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X