அரசு அலுவலகம், பள்ளி சுவர்களில் விளம்பர போஸ்டர்கள்; அதிகாரிகள் 'கொர்'
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கரூரில் அரசுக்கு சொந்தமான அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டும் படலம் மீண்டும் தொடங்கியுள்ளது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால், கரூரில் உள்ள அரசு அலுவலக சுவர்கள் விளம்பர பலகைகளாக மாறி வருகின்றன.
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என அறிவிக்கப்பட்டு விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்த அரசு அறிவிப்பையே மறைக்கும் அளவுக்கு அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. தற்போது கரூரில் உள்ள பெரும்பாலான அரசு சொந்தமான அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் தனியார் தரப்பில் போஸ்டர்கள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, பள்ளி சுவர்களில் ஆபாச படங்கள் குறித்த போஸ்டர் அதிகம் ஒட்டப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலகம், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலக சுவர்களில் அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் வழிகாட்டி போர்டுகள், அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு போர்டுகளிலும் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப் பட்டுள்ளது. இதனால் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.

எனவே, அரசு அலுவலக சுவர்கள், பள்ளிக்கூடங்களின் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதப்பட்டுள்ள அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடை முறை படுத்த முன் வரவேண்டும். இல்லையேல் அரசு அலுவலக சுவர்கள் தனியாரின் விளம்ப சுவர்களாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X