'ரூ.586 கோடி சரபங்கா நதி திட்டம் விவசாயிகளுக்கானது இல்லை' | சேலம் செய்திகள் | Dinamalar
'ரூ.586 கோடி சரபங்கா நதி திட்டம் விவசாயிகளுக்கானது இல்லை'
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 


ஆத்துாரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 23வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. அதில் மாநில பொதுச் செயலர் சண்முகம் பேசியதாவது:
ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவுகளை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். 586 கோடி ரூபாயில் கொண்டு வந்த சரபங்கா நதி திட்டம், விவசாயிகளுக்கானது இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஓட்டுகளை பெறுவதற்கு சுயநலமாக கொண்டு வந்த திட்டம். 2006ல் கொண்டு வந்த வன உரிமை சட்டம், 2008ல் அமல்படுத்தப்பட்டது. சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டம் தமிழகத்தில், 15 ஆண்டாக செயலற்ற நிலையில் உள்ளது. வைரம், தங்கத்துக்கு, 1.5 முதல், 3 சதவீதம் வரை ஜி.எஸ்.டி., வரி உள்ளது. அரிசிக்கு, 5 சதவீதம் வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரி போடும் அமைச்சராக நிர்மலாசீதாராமன் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, வாழப்பாடியில் மாநாடு கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் நினைவிடத்தில் தியாகிகள் நினைவு ஜோதி எடுத்தபடி ஆத்துார் வந்தடைந்தனர்.
மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, சேலம் மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்பட பலர்
பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X