பெண் உள்பட 2 பேரை தாக்கி கழிவுநீர் ஊற்றிய கொடூரம்: பஞ்சாயத்து பேசி ரூ.3 லட்சம் பறித்த கல்நெஞ்சக்காரர்கள்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திருமணமான பெண்ணுடன் பேசியதால் சந்தேகம் அடைந்து பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கியதோடு, அவர் மீதும், அப்பெண் மீதும் கழிவுநீர் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.
இதுதவிர ஊர் பஞ்சாயத்தை கூட்டி, பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்தினரிடமே, 3 லட்சம் ரூபாய் பறித்ததாக, அவரது தந்தை, ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர், தாமரைக்கரை தேவர்மலை, ஆலாமரத்துாரை சேர்ந்தவர் கெலதிதம்படி, 60; மலைவாசியான இவர், நேற்று மகனுடன் வந்து, ஈரோடு எஸ்.பி., சசிமோகனிடம் அளித்த புகார் மனு:
என் மகன் முருகன், 26; திருமணம் ஆகாதவர். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிகிறார். கடந்த பிப்., 2ல், மகன், திருப்பூரில் உள்ள மளிகை கடைக்கு சென்றபோது, எங்கள் ஊரை சேர்ந்த பொம்மையன் மகள் ராஜேஸ்வரி, 20, என்பவரை பார்த்து பேசினார். அவர், பர்கூர், எலச்சிப்பாளையத்தை சேர்ந்த சிவண்ணாவின் மகன் குமாருடன், 6 மாதத்துக்கு முன் திருமணமானதாக தெரிவித்தார்.
அப்போது, அங்கு வந்த குமார், இருவரும் பேசுவதை சந்தேகப்பட்டு முருகனிடம் கேட்டு தகராறு செய்தார். தொடர்ந்து இருவரையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார். பின், சிவண்ணா தலைமையில் சிலர், எலச்சிப்பாளையத்துக்கு அழைத்து வந்து அங்குள்ள அங்கன்வாடி அருகே வைத்து சாக்கடை கழிவுநீரை இருவர் மீதும் ஊற்றி வன்கொடுமை செய்தனர். முருகனை கட்டி வைத்து இரவு முழுக்க அடித்து கொடுமைப்படுத்தினர்.
இதையடுத்து எலச்சிப்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஊர் பஞ்சாயத்தை கூட்டி, சிவண்ணா தரப்புக்கு, 3 லட்சம் ரூபாயை உடனே செலுத்தி, மகன், ராஜேஸ்வரியை அழைத்துச்செல்ல உத்தரவிட்டனர். இல்லையெனில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவதாக மிரட்டினர். வேறு வழியின்றி வட்டிக்கு பலரிடம் கடன் வாங்கி, பிப்., 10ல் தேவர் மலை மாரியம்மன் கோவிலில், மீண்டும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி, 3 லட்சம் ரூபாயை வழங்கி மகனை மீட்டேன்.
சிவண்ணா தரப்பினர் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் குணமடைந்த பின், அவரது பெற்றோர் அழைத்துச்சென்றனர். ஆனால், பணத்தை பறித்த கும்பல், தற்போது வரை எங்களை மிரட்டி வருகின்றனர்.
எலச்சிப்பாளையம் ஊரில் முக்கிய பிரமுகராக உள்ள நாகன், சிவண்ணா ஆகியோர், மலைவாழ் மக்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ளனர். பர்கூர் போலீசார் விசாரித்து, ஜூலை, 28ல் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். அப்போது, பஞ்சாயத்துதாரர்கள், 3 லட்சம் ரூபாயை, ஆக., 6க்குள் தருவதாக உறுதி அளித்தனர். இதுவரை தராமல் மிரட்டி வருகின்றனர். என்னையும், குடும்பத்தினரையும் மிரட்டி பறித்த, 3 லட்சம் ரூபாயை மீட்டுத்தர வேண்டும். மகனை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X