குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதல் 17 வயது சிறுவன் அடித்து கொலை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதல் 17 வயது சிறுவன் அடித்து கொலை
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 


பர்கூர் அருகே, இரு குடும்பங்களுக்கிடையே இருந்த முன்விரோத தகராறில், 17 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பாலேப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராம்நகரை சேர்ந்தவர் குப்புசாமி, 39; துாய்மை பணியாளர். இவரது மகன் முருகேசன், 17, கூலித்தொழிலாளி; இவரது வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர் பிரபு, 27; இவர்கள் குடும்பத்திற்கிடையே பிரச்னை இருந்த நிலையில், கடந்த, 7 மாதங்களுக்கு முன் குப்புசாமியின் மனைவி மங்கம்மாள் மாயமானார்.

அதற்கு, பிரபு குடும்பத்தினர் காரணம் எனக்கூறி, குப்புசாமி குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர். அதே போல கடந்த இரு மாதங்களுக்கு முன், பிரபுவின் தந்தை ராஜா இறந்தார். அதற்கு குப்புசாமி குடும்பத்தினர் காரணம் எனக்கூறி, பிரபு குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் ராம்நகரில், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு, 11:00 மணி அளவில் ராம்நகர் சாலையில் நடந்து சென்ற சிறுவன் முருகேசனை வழிமறித்த பிரபு, இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் கீழே விழுந்த முருகேசனின் தலையில், கல்லை துாக்கி போட்டு கொலை செய்தார்.
தகவலின்படி வந்த பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் போலீசார் முருகேசனின் உடலை மீட்டனர்.
இக்கொலை தொடர்பாக பிரபு, அவரது அண்ணன் திருப்பதி, 30, தாய் பொட்டுஅம்மாள், 50, ஆகிய மூவரை கைது செய்து, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X