'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி சிறுமிகடத்தல்; 2 பேர் போக்சோவில் கைது | வேலூர் செய்திகள் | Dinamalar
'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி சிறுமிகடத்தல்; 2 பேர் போக்சோவில் கைது
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

வேலுார்:வேலுார் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கடத்தி சென்ற வாலிபர் உள்பட இருவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.


கடலுார் மாவட்டம் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த ஜெகன், 19; திருப்பூரில் ஜவுளி நிறுவன தொழிலாளியாக உள்ளார். வேலுார் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி, வேலுாரில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம், 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஜெகன் கடத்தி சென்றார். இதற்கு சிறுமியுடன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த, 19 வயது பெண் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர், வேலுார் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார், வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில் ஜெகன் சிறுமியை கடத்தி சென்றது உறுதியானது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெகனை கைது செய்து, சிறுமியை மீட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த, 19 வயது பெண்ணையும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X