வளைந்த மூங்கிலில் தேசியக்கொடி கல்லுாரி முதல்வருக்கு கண்டனம் | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
வளைந்த மூங்கிலில் தேசியக்கொடி கல்லுாரி முதல்வருக்கு கண்டனம்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News

தஞ்சாவூர்:கும்பகோணம் அரசு கவின் கலை கல்லுாரியில், வளைந்து நின்ற மூங்கிலில், நாற்காலி போட்டு ஏறி நின்று தேசியக்கொடி ஏற்றிய கல்லுாரி முதல்வரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பழமையான கும்பகோணம் அரசு கவின் கலை கல்லுாரியில், ஆக., 15ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, கல்லுாரியில் கொடி மரம் இல்லாத நிலையில், முதல்வர் அருளரசன், கொடி மரத்திற்கு பதிலாக வளைந்து நின்ற மூங்கிலில் தேசியக்கொடியை கட்டி, மேசையும் அதன் மீது நாற்காலியும் போட்டு ஏறி நின்று கொடி ஏற்றி உள்ளார்.
அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. இதற்கு, முன்னாள் மாணவர்கள் உட்பட பலரும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசியக்கொடியை ஏற்றும் போது, கொடி மரம் நேராக இருக்க வேண்டும். கொடி ஏற்றிய பின், முறையாக அதற்கு மரியாதை செலுத்த வேண்டும்.

ஆனால், கவின் கலை கல்லுாரி முதல்வர் தேசியக்கொடியை ஏனோதானோ என ஏற்றி விட்டு, முறையாக மரியாதையும் செலுத்தவில்லை. அருகில் இருந்த பேராசிரியர்களும் முறையாக மரியாதை செலுத்தவில்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது. பாரம்பரியமிக்க, ஒரு கல்லுாரி முதல்வரின் செயல்பாடு கேலிக்கூத்தாக மாறியுள்ளது. அரசு, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:கொடி மரத்துக்கு கூட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. தேசியக்கொடியை ஏற்றும் விதிமுறை கூட தெரியாத முதல்வராக உள்ளார். ஓவிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா துறையில் கலை இயக்குனர்கள் உருவாகும் இடமான கல்லுாரியில், முதல்வரின் செயல் மிகவும் வேதனையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X