பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி வழக்கில் ஆவணங்கள் மாயமானதாக பரபரப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி வழக்கில் ஆவணங்கள் மாயமானதாக பரபரப்பு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

விழுப்புரம்:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், சில ஆவணங்கள் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது.


பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது, விக்கிரவாண்டி, பரனுார், செங்குறிச்சி டோல்கேட் ஊழியர்கள் ஐந்து பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.அப்போது, சிறப்பு டி.ஜி.பி., - பெண் அதிகாரி மொபைல் போனில் பேசிய உரையாடல் பதிவுகள், 'வாட்ஸ் ஆப்' மெசேஜ், மொபைல் அழைப்பு பதிவு கள் உள்ளிட்ட, வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி கேட்டுள்ளார்.

அப்போது, ஆவணங்கள் கிடைக்காமல் தேடி உள்ளனர். உடனடியாக கிடைக்காததால் ஆவணங்களை தேடும் படி, கோர்ட் ஊழியர்களுக்கும், மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்த ஆவணங்கள் கோர்ட்டில் வேறு இடத்தில் இருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நேற்று பரவிய தகவலால் திடீர் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X