இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை காட்டிபல கோடி சுருட்டிய மோசடி தம்பதி கைது
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சேலம்:இரட்டிப்பு பணம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியரை கைது செய்த போலீசார், அவர்களது மகன், நிதி நிறுவன மேலாளரை தேடி வருகின்றனர்.


சேலம், ரெட்டியூர், தாசில்தார் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 54. இவர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, எல்.ஐ.சி., காலனியில், 'ஜஸ்ட் வின் ஐ.டி., டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார்.
சேலத்தை தலைமையிடமாக வைத்து, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட, எட்டு இடங்களில் கிளைகள் அமைத்தார்.அங்கு, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு மாதம் கழித்து, 18 ஆயிரம் ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு தரப்படும் என, அறிவிப்பு வெளியிட்டார். அதை நம்பி, சேலம், வேலுார், மதுரை, நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர் என, தமிழகம் முழுதும், 4,000 பேருக்கு மேல் முதலீடு செய்தனர்.

குறிப்பாக, வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும், 40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பணம் கிடைக்காததால், கடந்த, 16ல், சேலத்தில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டனர்.அப்போது, அவர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலசுப்ரமணியன் குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதுகுறித்து, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே, பெரியபட்டி மப்ளி காட்டுவளவைச் சேர்ந்த காவேரியப்பன், 36, அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.அதில், இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை காட்டி, 3.70 லட்சம் ரூபாயை அபகரித்துக்கொண்டு, தற்போது கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இதனால், பாலசுப்ரமணியன், அவரது மனைவி தனலட்சுமி, 50, மகன் வினோத், 24, நிறுவன மேலாளர் கதிர்வேல், 35, ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல், பண சுழற்சி திட்ட தடை சட்டம் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
சேலம் தனிப்படை போலீசார் விசாரித்து, சென்னையில் இருந்த பாலசுப்ரமணி, தனலட்சுமியை, கைது செய்தனர். தொடர்ந்து வினோத், கதிர்வேலை தேடி வருகின்றனர். வேலுாரைச் சேர்ந்த, 33 பேர், 37 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளித்த புகார்களை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரைப்பது குறித்து போலீசார் ஆலோசிக்கின்றனர்.
இந்த வழக்குகள் மட்டுமின்றி, பாலசுப்ரமணியன் மீது, ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவுகளில், மூன்று மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து நடத்த, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட குடும்பத்தினர், ஊழியர்களிடம், பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, சேலம் உட்பட இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்ட மாவட்டங்களில், பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X