இரு பிரிவினர் மோதல்14 பேர் மீது வழக்கு பதிவு | கடலூர் செய்திகள் | Dinamalar
இரு பிரிவினர் மோதல்14 பேர் மீது வழக்கு பதிவு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

பெண்ணாடம்:பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த திருவட்டத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 19. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆறு பேருடன், மூன்று பைக்குகளில் பெண்ணாடம் சென்று கொண்டிருந்தார்.அம்பேத்கர் நகர் அருகே நின்றிருந்த அரவிந்த் உட்பட எட்டு பேர், மூன்று பைக்குகளையும் வழிமறித்து சுபாஷ் உட்பட ஆறு பேரை திட்டி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக, சுபாஷ் அளித்த புகாரில், அரவிந்த் உட்பட 8 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.அதே போல், அம்பேத்கர் நகர் அரவிந்த் புகாரில், சுபாஷ் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X