1,000 கிலோ குட்கா பறிமுதல்: 6 பேர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
1,000 கிலோ குட்கா பறிமுதல்: 6 பேர் கைது
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News

எம்.கே.பி., நகர், குஜராத்தில் இருந்து, லாரியில் கடத்தி வரப்பட்ட, 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜர்தா, குட்காவை பறிமுதல் செய்து, ஆறு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.குஜராத்தில் இருந்து லாரியில் ஜர்தா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கும்மிடிப்பூண்டி வழியாக, மாதவரத்திலுள்ள குடோனுக்கு கடத்தி வருவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.போலீசார் குடோனில் கண்காணித்த போது, லாரியில் இருந்து ஜர்தா பொருட்களை இறக்குவது தெரிந்தது. உடனே, போலீசார் அங்கிருந்த ஆறு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், குடோன் உரிமையாளர் மாதவரத்தைச் சேர்ந்த அமீர்ஜித் குமார் சிங், 34; சவுகார்பேட்டை மண்ணப்பன் தெருவைச்சேர்ந்த துரித உணவக உரிமையாளர் சதிஷ்குமார், 34; சவுகார்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 24; மாதவரத்தைச் சேர்ந்த தேவந்திர சிங், 52; சுனில் குமார் சோனி, 45; குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த லாரி கிளீனர் அனில்பாய் சவுதா, 52, என தெரிந்தது.அவர்களை கைது செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் அஜய் என்பவரை தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து, 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,000 கிலோ ஜர்தா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், ஆந்திராவில் இருந்து, ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சத்யபாலன், 25; திருநெல்வேலி, நாங்குநேரியைச் சேர்ந்த உமாபதி, 23, ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X