30 கிலோ போதை பொருள்ரயிலில் கடத்தியவர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
30 கிலோ போதை பொருள்ரயிலில் கடத்தியவர் கைது
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



சென்னை, விரைவு ரயிலில் குட்கா உள்ளிட்ட 30 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்தவரை, ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.கர்நாடகாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பெங்களூர் விரைவு ரயிலில், போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரயில் வந்த போது, ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., முத்துகுமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். சந்கேத்தின்படி, பயணி ஒருவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது குட்கா, பான்பராக் போன்ற போதை பொருள் பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் அவர், எண்ணுாரைச் சேர்ந்த முகமது அசாருதீன் என தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, 30 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X