தம்பியை வழியனுப்பிய அக்காஏர்போர்ட்டில் மயங்கி உயிரிழப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
தம்பியை வழியனுப்பிய அக்காஏர்போர்ட்டில் மயங்கி உயிரிழப்பு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



சென்னை,
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் தம்பியை வழியனுப்ப, சென்னை விமான நிலையம் வந்த அக்கா, மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரத்தை சேர்ந்தவர் சுப்ரியா, 37. இவரது தம்பி வெங்கட் ராஜேஷ். சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கு, பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்துள்ளது.வேலையில் சேர்வதற்காக நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, ஏர்பிரான்ஸ் விமானத்தில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். தம்பியை வழியனுப்ப சுப்ரியாவும், அவரது கணவர் கிரண்குமாரும் உடன் வந்திருந்தனர். விமான முனையத்திற்குள் வெங்கட் செல்லும் போது, சுப்ரியா திடீரென மயங்கி விழுந்தார். விமான நிலையத்தில் உள்ள தனியார் டாக்டர்கள், சுப்ரியாவை பரிசோதித்த போது, மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. அக்கா இறந்ததை தாங்க முடியாத தம்பி, தன் பயணத்தை ரத்து செய்தார். இது குறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார், சுப்ரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X