கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் கோலாகலம் | சென்னை செய்திகள் | Dinamalar
கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் கோலாகலம்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



சென்னை, கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில் இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று கிருஷ்ணருக்கு யாகம் வளர்த்து, அலங்காரம், சந்தியா ஆரத்தி நடந்தது. பின், தரிசன ஆரத்தி, பஜன், நைவேத்தியம், அபிஷேகம், மகா ஆரத்தி நடந்தது.திருவான்மியூர், கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கிருஷ்ண ஜன்மாஷ்டமியாக இரண்டு நாள் விழா கொண்டாடப்பட்டது.சென்னையில் வைணவ சம்பிரதாயம் கடைபிடிக்காத கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன.சென்னை நகரில் ஏராளமான வீடுகளில் வீதி முதல் பூஜை அறை வரை கிருஷ்ணர் கால் பாதம் வைத்து, அலங்கரித்தனர்.மாலை, சீடை, அவல், நாவல் உள்ளிட்ட கனி வகைகள், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபாடு செய்து, அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.வைணவர்கள் இன்று ஸ்ரீஜெயந்தியை கொண்டாடுகின்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நாளை மாலை ஸ்ரீஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X