விமானத்தில் புகைப்பிடித்த மலேஷியா பயணி கைது  | சென்னை செய்திகள் | Dinamalar
விமானத்தில் புகைப்பிடித்த மலேஷியா பயணி கைது 
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



சென்னை, கோலாலம்பூரில் இருந்து, சென்னை வந்த விமானத்தில், தடையை மீறி புகைப்பிடித்த, மலே�யா நாட்டு பயணியை, சென்னை விமானநிலைய போலீசார் கைது செய்தனர்.மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு, இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில், மலே�யா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன், 52, என்பவர் மனைவியுடன் பயணம் செய்தார்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இரவு 10:15 மணியளவில், கோபாலன் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து, விமானத்திற்குள்ளேயே புகைப்பிடித்துள்ளார்.இதை, சக பயணியரும், விமான பணிப் பெண்களும் கண்டித்தனர். இருந்தாலும், அதை கோபாலன் பொருட்படுத்தவில்லை. இது குறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் விமானம் தரையிறங்கியதும், கோபாலனை சோதனை செய்து, சென்னை விமானநிலைய போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வழக்கு பதிந்த போலீசார், கோபாலனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X