அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு சமதர்ம சமூக நீதிக்கு எதிரானது :பட்டதாரி ஆசிரியர் சங்கம் காட்டம் | தேனி செய்திகள் | Dinamalar
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு சமதர்ம சமூக நீதிக்கு எதிரானது :பட்டதாரி ஆசிரியர் சங்கம் காட்டம்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

தேனி:முதல்வர் ஸ்டாலினின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு நடைமுறைக்கு மாறாகவும், சமதர்ம சமூக நீதிக்கு எதிராகவும் உள்ளது' என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தேனியில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் சுதந்திர தின உரையில், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு வழங்கியது போல் 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். இதை வரவேற்கிறோம். ஆனால் 2022 ஜன., 1 முதல் வழங்காமல் 2022 ஜூலை 1 முதல் வழங்கியிருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பண வீக்கத்தின் அடிப்படையில் விலைவாசி உயர்வு புள்ளி விபரங்களை ஆய்வு செய்து இந்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் முதல்வரின் அறிவிப்பு வழக்கத்திற்கு மாறாக உள்ளது.கொரோனா ஊரடங்கில் 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியது. ஆனால், தமிழக அரசு ஆறுமாதங்கள் கழித்து நடைமுறைப் படுத்தியது.

அதேபோல் தற்போதும் மத்திய அரசு வழங்கியதற்கு பின் 6 மாதங்கள் கழித்து வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கலெக்டர்கள், நீதிபதிகளுக்கு ஜனவரி 1 முதல் வழங்கிவிட்டு, அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் வழங்குவது சமதர்ம சமூக நீதி பேசும் தி.மு.க., அரசின் தேர்தல் அறிவிப்பிற்கு எதிரானது.' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X