மின்சாரம் தாக்கி வாலிபர் பலி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கட்டுமான பணி நடந்து வரும் திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மதுரையை சேர்ந்த சாரூக் மொய்தீன் 25, பலியானார்.

ராஜபாளையம் முடங்கியார் ரோடு பண்ணையார் ஆர்ச் அருகே தனியார் திருமண மண்டப பணிகள் நடந்து வருகிறது. மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த சாரூக் மொய்தீன் 25,ஏ.சி பொருத்தும் பணியில் ஈடுபட்ட போது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டது அறியாமல் தொட்டதில் துாக்கி வீசப்பட்டார்.பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X