பெண் போலீஸ் மகள் கடத்தல் காவலர் உட்பட 4 பேர் மீது வழக்கு | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண் போலீஸ் மகள் கடத்தல் காவலர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

கடலுார்:பெண் போலீசின் மகளை கடத்திய வழக்கில், போலீஸ்காரர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர், 42 வயது பெண். இவர், குடும்பத்துடன் புதுநகர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறார்.இவரது, 19 வயது மகள் கடலுார் தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் மாயமானார். தனது மகளை, சிதம்பரம், அண்ணாமலை காவல் நிலைய முதல் நிலைய காவலரான கடலுார், வில்வநகர் வேல்முருகன், 32; கடத்திச் சென்று விட்டார்.

இதற்கு உடந்தையாக கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசான, அவரது தங்கை மகாலட்சுமி மற்றும் அக்கா காஞ்சனா, மாமா அருள் இருந்துள்ளனர்.இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மகளை மீட்டுத் தருமாறு கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகன் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X