சுண்டக்காமுத்துார் குளத்தில் முழு கொள்ளளவு தேக்கணும்: பொதுப்பணித்துறைக்கு உத்தரவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சுண்டக்காமுத்துார் குளத்தில் முழு கொள்ளளவு தேக்கணும்: பொதுப்பணித்துறைக்கு உத்தரவு
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

கோவை:பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில், முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, பொதுப்பணித்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் பெய்த மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விட்டதில், உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி, கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, குனியமுத்துார் செங்குளம், வெள்ளலுார் குளம் ஆகியவை நிரம்பியுள்ளன.பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் மட்டும், முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கவில்லை. மாறாக, குனியமுத்துார் செங்குளத்தில் இருந்து, கேரளா பாரதப்புழாவுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இது, நீர் நிலை பாதுகாவலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.செங்குளம் மதகை அடைத்து, சுண்டக்காமுத்துார் குளத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, பொதுப்பணித்துறைக்கு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, சுண்டக்காமுத்துார் குளத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு, உயரதிகாரிகள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.இதேபோல், குறிச்சி குளம் மற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' வேலைகள் நடந்து வரும் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, முத்தண்ணன், கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி குளங்களில், பழைய தண்ணீரை வெளியேற்றி விட்டு, புது வெள்ளம் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X