தகவல் அறியும் உரிமை சட்டத்தில்மாமன்ற வீடியோ வழங்க மறுப்பு
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:கோவை மாநகராட்சி மாமன்ற நிகழ்வு வீடியோவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க, மாமன்ற செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நடந்து வருகிறது. இவ்வளாகத்தை சமீபத்தில் சீரமைத்தபோது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாமன்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு, 'சிடி'யாக பதிவு செய்யப்படுகின்றன.ஜூன், 30ல் நடந்த மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சிக்கு சொந்தமாக ஜி.கே.டி., நகரில் உள்ள பூங்கா இடத்தை, தனியாருக்கு வழங்கி விட்டு, அவர்களது இடத்தை மாற்றிக் கொள்ள, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுதொடர்பாக அறிய, அக்கூட்டத்தில் நடந்த வீடியோ பதிவுகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.இதற்கு மாமன்ற செயலாளர் அமல்ராஜ் அனுப்பியுள்ள பதிலில், 'கோயமுத்துார் மாநகராட்சி சட்டத்தின் படி, மாமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பது கமிஷனரின் பொறுப்பு. மன்ற நடவடிக்கைகள் குறித்து மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் கருத்து இறுதியானது.மாமன்ற நடவடிக்கைகள் பதிவாகியுள்ள வீடியோக்கள், அரசியல் ஆதாயத்துக்கோ அல்லது அரசியல் ரீதியான விமர்சனங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத நோக்கத்துக்காக பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக, வீடியோ வழங்க வேண்டாம் என, மேயர் உத்தரவிட்டுள்ளார். அதனால், ஜூன், 30ல் நடந்த கூட்டத்தின் முழு வீடியோ வழங்க இயலாது.மேல்முறையீடு செய்ய விரும்பினால், துணை கமிஷனருக்கு, 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X