'புராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டத்தால் மாணவர்களுக்கு தைரியம் வந்துருச்சு!பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பு!
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

புராஜக்ட் பள்ளிக்கூடம்' என்ற திட்டத்தின் வாயிலாக, பள்ளிகளுக்கு சென்று பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதால், அவர்களுக்கு போலீஸ் என்கிற அச்சம் குறைந்து, வெளி வராத பல குற்றங்கள் இத்திட்டத்தின் வாயிலாக கிடைத்துள்ளதாக, என, கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி.'புராஜக்ட் பள்ளி' பற்றி சொல்லுங்களேன்?கோவையில் 'புராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டம், கடந்த மாதம் 30ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முழு நோக்கமே, பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றம், பாலியல் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். 10 வயதுக்கு கீழ், 10 வயதுக்கு மேல், 10 வயதுக்கு மேல் உள்ள மாணவ - மாணவிகள் என, மூன்று வகைகளாக குழந்தைகள் பிரிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்கென ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், இரண்டு காவலர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களின் உதவியுடன் இது வரை, 560 பள்ளிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல், போதை பொருட்கள் தடுப்பது, சமூக வலைதளங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள, குழந்தைகளின் மனநிலை எப்படி உள்ளது?இத்திட்டத்தின் வாயிலாக, இதுவரை நான்கு குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளன. பல குழந்தைகள் முன்வந்து பிரச்னையை சொல்லுகின்றனர். வெளிவராத பல குற்றங்கள் குறித்த தகவல்கள், இத்திட்டத்தின் வாயிலாக கிடைத்துள்ளது.கிராமப்புறங்களில் இத்திட்டத்துக்கு வரவேற்பு உள்ளதா?கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில், 997 பள்ளிகள் உள்ளன. தற்போது வரை குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்களிடம் நடக்கும் கலந்துரையாடல் காரணமாக, அவர்களுக்கும் போலீஸ் என்கிற அச்சம் குறைகிறது. வெளிப்படையாக பேச முன் வருகின்றனர். இதனால், இனி வரும் நாட்களில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

சமீப நாட்களாக பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளது. அதனை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறீர்கள்?போதை பழக்கத்தை தடுப்பது குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். போலீசாருக்கும், குழந்தைகளுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. போலீசாருடன் நெருக்கமாக பேசுவதால், அவர்களின் பிரச்னைகள் வெளியே வருகின்றன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் போலீஸ் தேவை என்றால், அந்த பகுதியில் தினமும் அதிகாரிகளை பணிக்கு அமர்த்த முடிகிறது.n சமூக வலைதளங்களில் இன்றைய மாணவர்கள் பலர் மூழ்கி கிடக்கின்றனர். பலரும் தேவையற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க என்ன செய்கிறீர்கள்?இன்றைய காலத்தில் சமூக வலைதளம் தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் பயன்படுத்தக்கூடாது என, சொல்ல முடியாது. ஆனால், அதனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக் கூற வேண்டும். ஆன்லைன் குற்றங்கள் குறித்து, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறோம்.

குறிப்பாக, தீய செயல்களை தடுப்பது குறித்து பேசுகிறோம்.பள்ளிக்கூடங்களை தொடந்து, கல்லுாரிகளுக்கு இத்திட்டத்தை கொண்டு செல்லும் திட்டம் இருக்கிறதா?தமிழக முதல்வரால், 'டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்ஸ்' எனும் திட்டம், மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. தற்போது கோவையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கல்லுாரிகளுக்கு சென்று, போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு முறை மட்டும் செல்லாமல், அடிக்கடி சென்று அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இதனால், வரும் நாட்களில் போதை பழக்கம், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.-நமது நிருபர்-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X