சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது என்ன ? | சென்னை செய்திகள் | Dinamalar
சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது என்ன ?
Added : ஆக 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News

புதுடில்லி: மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், மிக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.



தவறும் செய்யவில்லை.

இந்நிலையில் 14 மணி நேர சோதனை நிறைவடைந்ததையடுத்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி, டில்லி ஆம் ஆத்மி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். 14 மணி நேரம் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் எனது கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை கைப்பற்றி எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.





 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X